search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள காங்கிரஸ்"

    பிரதமர் நரேந்திர மோடியை கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அப்துல்லா குட்டி. இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து எழுதி உள்ளார்.

    அதில், “மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தி வருவதால் தான் நரேந்திர மோடியால் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. மோடியின் தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம் போன்றவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, மோடியின் வளர்ச்சி திட்டங்களால் கிடைத்தது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இவருடைய இந்த பதிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யாக இருந்த போது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து 2009-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக விலகி இருக்கும் கே.எம்.மாணி கூட்டணிக்கு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் தலைமை ஒதுக்கியுள்ளது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. #KeralaCongress
    திருவனந்தபுரம்:

    மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1980-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களில் யாருக்கேனும் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இரண்டாண்டுகளாக விலகி இருக்கும் முன்னாள் மந்திரி கே.எம்.மாணியின் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது.



    காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவுக்கு அம்மாநில காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த மாணி பார் ஊழல் வழக்கில் சிக்கியது அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால், அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ஆனால், கே.எம். மாணியின் கட்சி கனிசமான கிறிஸ்தவர்களின் ஓட்டு வங்கியை வைத்துள்ளதால், அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அவரது கட்சிக்கு காங்கிரஸ் தலைமை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டதை அடுத்து கே.எம்.மாணியின் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, மாநில தலைமை உள்ளிட்ட பலரை மாற்ற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #KeralaCongress
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் நடந்த செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு உள்ள இந்த தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சியின் மாநில தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1380-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மாநில தலைவராக இருக்கும் ஹசன் மாற்றப்பட்டு இளம் தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கும் ராகுல் காந்தி நாடு திரும்பிய உடன் புதிய தலைவர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட தலைவர்களையும் மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×